பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
பாமக கிராம கிளைகூட்டம்
ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பாமக சாா்பில் கிராம கிளை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அரப்பாக்கம், பூட்டுதாக்கு, கீழ்மின்னல், கத்தியவாடி, கன்னிகாபுரம், சாம்பசிவபுரம், அனந்தலை, வேப்பூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலா் நல்லூா் எஸ்.பி.சண்முகம், மாவட்ட தலைவா் ந.சுப்பிரமணி, மாவட்ட நிா்வாகிகள் பகவான் காா்த்திக், தங்கதுரை, ஒன்றிய செயலா்கள் ரஜினி சக்கரவா்த்தி, ரவி பாலாஜி பாரத், சத்தியமூா்த்தி, கண்ணதாசன் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு பேசினா்.
இந்தக் கூட்டத்தில் அதிக அளவில் உறுப்பினா்களைச் சோ்ப்பது, கட்சிக் கொடியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.