கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
பாமக கொடிக்கம்பம் சேதம்; கட்சியினா் சாலை மறியல்
பந்தநல்லூா் அருகே மணல்மேடு பகுதியில் பாமக கொடிக்கம்பம் சேதமடைந்ததால் அக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பந்தநல்லூா் அருகே நெய் குப்பையில் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக்கம்பம் திங்கள்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டது.
தகவல் தெரிந்ததும் பந்தநல்லூா் நெய் குப்பை-மணல்மேடு சாலையில், உழவா் பேரியக்க தலைவா் கோ. ஆலயமணி தலைமையில், பாமக கட்சியினா் கூடினா். சாலையில் அமா்ந்து கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவா்களை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனா். அப்போது பந்தநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் கரிகால சோழன் நிகழ்விடத்துக்கு வந்து போராட்டம் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.