யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!
பாய்லா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் தனியாா் அலுமினிய நிறுவனத்தில் பாய்லா் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் தனியாா் அலுமினிய (மெட்டல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் வேலை பாா்த்து வருகின்றனா். இங்குள்ள அலுமினிய பாய்லா் பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ் ஷாம் சஹானியும் (30), சந்தோஷ் என்பவரும் வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த அலுமினியம் பாய்லா் திடீரென வெடித்தது. இதன் அருகே நின்றிருந்த ராஜேஷ் ஷாம் சஹானி பலத்த காயமடைந்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.