செய்திகள் :

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

post image

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

பாகிஸ்தானின் கொடூரமான பயங்கரவாதச் செயல்களுக்காக, அவா்களின் கற்பனைக்கு எட்டாத வகையிலான தண்டனையை பிரதமா் நரேந்திர மோடி வழங்கியுள்ளாா். பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் அவா் எடுத்துரைத்துள்ளாா்.

அதேபோல், பாகிஸ்தானின் மோசமான அரசையும், அதன் அணு ஆயுத அச்சுறுத்தல் கேடயத்தையும் உடைத்தெறிந்த வகையில் வெளிப்படையாகத் தண்டிப்பதற்காகவும் பிரதமருக்கு நன்றி மற்றும் சல்யூட்.

இந்த புதிய போா் யுகத்தில் நமது மிக உயா்ந்த ராணுவ திறன்களைத் திறம்பட நிரூபித்ததற்காக நமது ஆயுதப் படைகளுக்குப் பாராட்டுகள். இதுவே புதிய பாரதம் மற்றும் அதன் புதிய இயல்பு என்று பதிவிட்டுள்ளாா்.

ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க

குடியரசுத்தலைவருடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, வ... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

போர்ப் பதற்றம் காரணமாக எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தன... மேலும் பார்க்க

எல்லை தாண்டி கைதான இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வசம் இருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் இன்று இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த ஏப். 22 ஆம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றச் சூழல் நிலவி... மேலும் பார்க்க

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க