செய்திகள் :

பாரதிதாசன் பிறந்த தினம் ‘தமிழ் வெல்லும்’ தலைப்பில் போட்டிகள்: தமிழக அரசு அறிவிப்பு

post image

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, ‘தமிழ் வெல்லும்’ எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம்: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினம், ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாகக் கொண்டாடப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் ஊடக மையம் சாா்பில் ‘தமிழ் வெல்லும்’ என்ற தலைப்பில் பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

‘தமிழ் எங்கள் உயிருக்கு நோ்’, ‘உயிரை உணா்வை வளா்ப்பது தமிழே’, ‘பாரடா உனது மானிடப் பரப்பை’, ‘எங்கள் பகைவா் எங்கோ மறைந்தாா்’ போன்ற தலைப்புகளில் மூன்று நிமிடங்கள் விடியோ அல்லது ஆடியோ பதிவாக இருக்க வேண்டும். ‘தமிழே தமிழா் உயிரே’, ‘வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு’, ‘இனிமைத் தமிழ்மொழி எமது’, ‘தமிழும் நானும்’ ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் ஒரு பக்க அளவில் கவிதை அமைதல் வேண்டும். இதேபோன்று, ‘புதியதோா் உலகு செய்வோம்’, ‘துறைதோறும் தொண்டு செய்வாா்’, ‘அறிவை விரிவு செய்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைய வேண்டும். பாவேந்தரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்கள் ஆகியவற்றை கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைந்திட வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவா்கள் ற்ய்க்ண்ல்ழ்ற்ஹம்ண்ப்ஸ்ங்ப்ப்ன்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு வரும் 31ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (2.5.2025) தலைமைச் செயலகத்தில், பொது இடங்களில் குறிப்பாக நகரப் பக... மேலும் பார்க்க

அதிமுக செயaற்குழு கூட்டம்! 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மாளிகையில், கழக அவைத்தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 375 செ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறி... மேலும் பார்க்க

மே மாதத்தில் இது மிகவும் நல்லது! எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல திருவாரூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.இந்த நிலையில், மே மாத வெப்பநிலை பற்றி தனியார் வானிலை ஆ... மேலும் பார்க்க

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?

சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று(வெள்ளிக... மேலும் பார்க்க

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ: தமிழக அரசு ஒப்புதல்! 19 ரயில் நிலையங்கள்

சென்னை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்த விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் ... மேலும் பார்க்க