செய்திகள் :

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்து 50 ஆண்டுகளாக கிடைக்காத இழப்பீடு - போராட்டம் தீவிரம்

post image

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக 1981-ம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதற்கு எதிராக நிலம் கொடுத்த மக்கள் நீண்ட காலம் போராட்டம் நடத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

பாரதியார் பல்கலைக்கழகம்

அதில் நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் 18 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நிலம் கொடுத்த மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்தக் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

பெ. சண்முகம்
பெ. சண்முகம்

“பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டை வழங்க வேண்டும். விவசாயிகள் கல்விக்காக மனம் வந்து மிகக் குறைவான விலைக்குத் தங்கள் விவசாய நிலத்தைக் கொடுத்திருந்தார்கள்.

‘அந்த மக்களுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.60 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இப்போதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மக்கள் சுமார் 45 ஆண்டுகளாக இழப்பீட்டுக்காக காத்திருக்கிறார்கள். 928 ஏக்கரில் சுமார் 300 முதல் 400 ஏக்கர் நிலம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம்

600 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அவர்களுக்கு பணத்தைக் கொடுங்கள் அல்லது நிலத்தைக் கொடுங்கள். விவசாயிகளைக் காத்திருக்க வைத்திருப்பது நியாயமல்ல. இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது.” என்றார்.

இழப்பீடு வழங்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்று சிபிஎம் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது முதல்வரின் கவனத்துக்கு சென்று, அமைச்சர் எ.வ. வேலு நேரடியாக சண்முகத்திடம் பேசியுள்ளார். “இந்தப் பிரச்னைக்கு முழு தீர்வு கிடைப்பதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

போராட்டம்

இன்னும் ஒரு சில நாள்களில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.” என்று வேலு கூறியுள்ளார். அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

`புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்-நடிகைகள்' - கொதிப்பில் எழுத்தாளர்கள்; அரசு தரப்பு விளக்கம் என்ன?

நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் நான்காவது புத்தக கண்காட்சி நட... மேலும் பார்க்க

அசத்திய கோவை தன்னார்வலர்கள்; ஏழை மக்களுக்கு சென்ற 2 டன் உணவு

கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் ஆடி 18 தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் பக்தர்கள் முன்னோர் மற்றும் மறைந்த உறவினர்களுக்கு உணவு, பழங்கள் படையலிட்டு வழி... மேலும் பார்க்க

தவெக மதுரை மாநாடு தேதி மாற்றம்; "காவல்துறை சொன்ன காரணம் இதுதான்" - என். ஆனந்த் விளக்கம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடக்குமென அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநாடு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

MP Sudha: `லேசான காயம்' - டெல்லியில் தமிழக எம்.பி சுதாவின் செயின் பறிப்பு!

டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருவதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் தெருநாய்கள்; அச்சத்தில் பொதுமக்கள் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அமைந்துள்ள ஜாப்ராபாத் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி சாலைகளில் சுற்றி திரிவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கிணற்று நீரால் கிராமத்தில் பரவும் தோல் நோய்; குடிநீருக்காக ஊர் விட்டு ஊர் போகும் அவலம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியில் உள்ள மக்கள் குடிநீருக்காக அங்கு உள்ளகிணற்று நீரையே நம்பியிருந்தனர். தற்போது கிணற்று நீர் சுகாதாரமானதாக இல்லை. அந்த நீரைக் குடித்ததால் தோல் சார்... மேலும் பார்க்க