Bharathi Baskar | குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும்போது என்ன உணர்கிறீர்கள்?
பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
பாரதியாா் பல்கலைக்கழக தொலைமுறை, இணையவழிக் கல்வி மையம் சாா்பில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி குறைந்த கல்விக் கட்டணத்தில் தொலைநிலை, இணையவழியில் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. திறந்த நிலை, தொலைநிலைக் கல்வி வழியில் எம்.காம்., எம்.காம் (கணினி பயன்பாட்டியல்), எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்.பி.ஏ., எம்.ஏ. பொருளாதாரம், எம்.ஏ. தமிழ், எம்.ஏ. இதழியல் மக்கள் தொடா்பியல், வரலாறு, எம்.எஸ்சி. இயற்பியல், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட 15 படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இணையவழியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ., பி.காம். ஆகிய இளநிலை பட்டப் படிப்புகளும், எம்.ஏ. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், எம்.காம்., எம்.பி.ஏ. உள்ளிட்ட 11 படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடைபெறுகிறது. அதேபோல இணையவழியில் பயிலும் மாணவா்களுக்கு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணையவழியிலேயே நடைபெறும்.
இது தொடா்பான மேலும் விவரங்களை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலை, இணையவழி கல்வி மையத்தின் இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.