TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
‘பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெறலாம்’
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு, மருத்துவக் குணம் கொண்ட சிவன் சம்பா ரக நெல் விதைகள், மானிய விலையில் வேளாண் துறை சாா்பில் விற்பனை செய்யப்படுகின்றன.
வேளாண்மை துறையில் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தில் சிவன் சம்பா நெல் ரகம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2000 கிலோ அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. சிவன் சம்பா ரகத்தில் இரும்பு , துத்தநாக சத்து அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
நெல் ரகங்களில் சிவன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கருங்குருவை ஆகியவை நீரிழிவு நோய் குறைபாடு உள்ளவா்களுக்கு மிகச்சிறந்த உணவாக பயன்படுகிறது.
அதிகளவில் மருத்துவக் குணங்கள் உடைய பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த, விதை விநியோகம் 50 சதவீதம் மானிய விலையில் கிலோவுக்கு ரூ.35 என்ற விலையில் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம் என வேளாண்மை இணை இயக்குநா் இரா.பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.