Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த...
பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா! கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்!
பாராட்டி பேச விரும்பிய லக்னௌ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற தில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய தில்லி அணியின் கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.
போட்டி முடிந்ததும் வீரர்களுடன் கைகொடுக்கும் நிகழ்வில் பங்கேற்ற கே.எல்.ராகுல் லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் கை கொடுத்துவிட்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவரிடம் பாராட்டி பேச வந்த சஞ்சீவ் கோயங்காவை அவர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
அவரைத் தொடர்ந்து அவரது மகன் சஸ்வத்தும் பேச முற்பட்டார். ஆனால், கே.எல். ராகுல் விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணி சரியாக விளையாடவில்லை. மேலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற மிகப் பெரிய தோல்வியால், மைதானத்திலேயே கடிந்துகொண்ட சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான விடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சரியாக விளையாடவில்லை என லக்னௌ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை தில்லி அணி ஏலத்தில் எடுத்தது. கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
மைதானத்தில் வைத்து அவமானப்படுத்தப்பட்டதற்கு அங்கு வைத்தே அவர் தனது ஆட்டத்தின் மூலம் திருப்பி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல். ராகுல் இந்தத் தொடரில், 3 அரைசதங்களுடன் 323 ரன்கள் குவித்து அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.
Great Response from KL Rahul to Sanjiv Goenka. Goenka got a lesson how to talk with his team members. Ab Pant ki baari hai?
— VIPIN KUMAR TANWAR (@mvipink) April 23, 2025
Video Courtesy - StarSports/Jio hotstar #klrahul#goenka#ipl#LSGvsDCpic.twitter.com/4kCRtu8tY2
இதையும் படிக்க: விராட் கோலி, டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்த கே.எல். ராகுல்!