உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து
கரூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) அன்றைய தினம், பாலக்காடு - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த ரயில் கரூா் - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. கரூா் - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.