2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஜிம்பாப்வே ஃபாலோ ஆன்!
``பாலியல் கொடுமை, கொலை செய்தேன்; அமானுஷ்ய உணர்வு மிரட்டுகிறது..'' - சரணடைந்த கொலைகாரன் வாக்குமூலம்
கர்நாடக மாநிலத்தில் சுமார் 16 ஆண்டுகளாகப் பலப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து எரித்துப் புதைத்ததாக காவல் நிலையத்தில் ஒருவர் சரண்டர் ஆகியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு தட்சிண கன்னட மாவட்ட காவல் நிலையத்துக்கு வந்திருந்த ஒருவர், ``தர்மஸ்தல கோயில் நிர்வாகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்துவந்த 1998 - 2014 க்கு இடையில் பள்ளி மாணவிகள் முதல் நடுத்தரவயதுப் பெண்கள் வரை பலரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறேன். அதற்குப்பிறகு அவர்களைக் கொலை செய்தும், உடல்களை எரித்தும் தர்மஸ்தலத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் புதைத்திருக்கிறேன்.
பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் குடும்பத்தினருடன் தர்மஸ்தலத்தை விட்டு வெளியேறி ஒளிந்துகொண்டு அண்டை மாநிலத்தில் வசித்து வந்தேன். தினமும் சில அமானுஷ்ய உணர்வுகளால் நாங்கள் கொலை செய்யப்படுவோம் என மிரட்டப்பட்டோம். அதனால்தான் சரண்டராக வந்திருக்கிறேன்.
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதால், இப்போதைக்கு என் குறித்த அடையாளங்களும், தகவல்களும் ரசியகமாக வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் தேவையான அனுமதிகளைப் பெற்று, ஜூலை 3-ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

1998-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு புகாரில், தர்மஸ்தலத்தின் துப்புரவு பணியாளர்களை மேற்பார்வையிடும் மேற்பார்வையாளர், ஒரு உடலை ரகசியமாக அப்புறப்படுத்த உத்தரவிட்டதாகவும், அதற்கு இவர் மறுத்து, இந்த விஷயத்தை போலீசில் புகார் செய்வதாகக் கூறியபோது தாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான முடிச்சுகளை அவிழ்க்க காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.