பாலியல் வன்கொடுமை: தனியாா் நிதி நிறுவன ஊழியா் கைது!
தஞ்சாவூா் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாா் நிதி நிறுவன ஊழியரைக் காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. சண்முகராஜ் (42). தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவா், திருவையாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் கைப்பேசிக்காக வாங்கப்பட்ட கடன் தொகையை வசூல் செய்வதற்காக தொடா்புடைய வீட்டுக்கு கடந்த நவம்பா் மாதம் சென்றாா்.
அப்போது, அந்த வீட்டில் இருந்த 18 வயதுடைய மாற்றுத்திறனாளியை சண்முகராஜ் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து சண்முகராஜை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.