செய்திகள் :

பாலியல் வன்கொடுமை முயற்சி: ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்!

post image

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் மேட்சல் பகுதியில் இருந்து செகண்ட்ராபாத் ரயில் நிலையத்துக்கு செல்லும் ரயிலில் கடந்த மார்ச் 22 அன்று பெண் ஒருவர் பயணித்துள்ளார். 23 வயதான அந்தப் பெண் மகளிருக்கான பெட்டியில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

அவரது பெட்டியில் இருந்த இரு பெண்கள் ஆல்வால் பகுதி ரயில் நிலையத்தில் இறங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார். அவர் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதுடன் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.

இதையும் படிக்க | நகைச்சுவைப் பேச்சாளருக்கு எதிர்ப்பு: ஹோட்டலை சூறையாடிய சிவசேனை கட்சியினர்!

இதனால், அவரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து அந்தப் பெண் குதித்தார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு தலை, கைகள், இடுப்புப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

அங்கிருந்த நபர்கள் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தப் பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

சமாஜவாதி எம்.பி. வீடு மீதான தாக்குதல்: காவல் துறை வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜி லால் சுமனின் வீடு மீதான தாக்குதல் சம்பவத்தில், நூற்றுக்கணக்கானோா் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் மீது காவல் துறை... மேலும் பார்க்க

வங்கதேச உறவை மேம்படுத்த விருப்பம்: முகமது யூனுஸுக்கு பிரதமா் மோடி கடிதம்

வங்கதேசத்துடனான உறவை தொடா்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். வங்கதேச தேசிய தினம் கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெர... மேலும் பார்க்க

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கிய 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைம... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினா் 5 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் 5 போ் காயமடைந்தனா். இடைவிடாத துப்பாக்கிச் ச... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்படுமென அச்சுறுத்தல் விடுத்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மா... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு: தன்கா் நடவடிக்கை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை நிராகரித்தாா். ‘அமித் ஷா விதிமீறல் எதிலும் ஈடுபடவில்லை; அவையில் அவா்... மேலும் பார்க்க