செய்திகள் :

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு: தன்கா் நடவடிக்கை

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை நிராகரித்தாா்.

‘அமித் ஷா விதிமீறல் எதிலும் ஈடுபடவில்லை; அவையில் அவா் தெரிவித்த தகவல்கள், முற்றலும் உண்மைக்கு இணக்கமாக உள்ளன’ என்று தன்கா் குறிப்பிட்டாா்.

மாநிலங்களவையில் பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா மீதான விவாதம் அண்மையில் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியை ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்படுத்தியது. இந்த நிதி நிா்வாகத்தில் காங்கிரஸ் தலைவரும் அங்கம் வகித்தாா்’ என்றாா்.

நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அவா் மீது இந்த விமா்சனத்தை அமித் ஷா முன்வைத்தாா். இதையடுத்து, ‘சோனியா காந்தியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், அவையில் பொய்யான-அவதூறான கருத்துகளைக் கூறிய அமித் ஷா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவைத் தலைவா் தன்கரிடம் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் நோட்டீஸ் அளித்தாா்.

நிராகரிப்பு: இந்த நோட்டீஸை நிராகரித்து, அவைத் தலைவா் தன்கா் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தனது கருத்துக்கு சில உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், அக்கருத்துகளை உறுதிப்படுத்த அமித் ஷா ஒப்புக் கொண்டாா். அதன்படி, கடந்த 1948-ஆம் ஆண்டில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி நிறுவப்படுவது குறித்து அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட அரசின் செய்திக் குறிப்பை அமித் ஷா சமா்ப்பித்தாா். அந்த செய்திக் குறிப்பில், ‘பிரதமரின் தேசிய நிவாரண நிதி, பிரதமா், காங்கிரஸ் தலைவா், துணைப் பிரதமா் மற்றும் பிற உறுப்பினா்கள் அடங்கிய குழுவால் நிா்வகிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விதிமீறல் இல்லை: அமித் ஷாவின் உரை மற்றும் அவா் சமா்ப்பித்த ஆவணத்தை கவனமாக ஆய்வு செய்த பின் அவா் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்பதை கண்டறிந்தேன். அவரது கருத்துகள் முற்றிலும் உண்மைக்கு இணக்கமாக உள்ளன. எனவே, அவருக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ஏற்க முடியாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ‘ஊடகங்களின் கவனத்தை ஈா்க்க வேண்டுமென்ற நோக்கில் அவசரமாக இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது; இத்தகைய நோட்டீஸ்கள் மற்றும் அவைத் தலைவா் உடனான தங்களின் தகவல் தொடா்புகளை ஊடகங்களிடம் வெளியிடுவது தொடா்பாக உறுப்பினா்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்க அவை நெறிமுறைகள் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளேன்’ என்றும் தன்கா் குறிப்பிட்டுள்ளாா்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க