பாகிஸ்தானில் பிறந்து, சீனாவில் ஸ்டாரான பெண் - ஓர் அடடே ஸ்டோரி!
பாலி: சுற்றுலா சென்ற இடத்தில் இறந்துபோன இளைஞர்; ’இதயம் இல்லை’ - பிரேத பரிசோதனை முடிவில் அதிர்ச்சி!
பாலி தீவில் இறந்த ஒரு இளைஞரின் உடல், இதயம் இல்லாமல் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது..
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் பாலிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். சென்ற இடத்தில் அவர் பாலி வில்லாவின் நீர்த்தேக்க குளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.
நான்கு வாரங்களுக்கு பிறகு அவரது உடல் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் அவருக்கு இதயம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியா அதிகாரிகள் இந்தோனேசியா அதிகாரிகளிடம் பதில் கோரியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
ஆஸ்திரேலியா உள்ளூர் சேனலிடம் இளைஞரின் தாயார் கூறுகையில் "இறந்த செய்தியை கேட்டு மனம் உடைந்துபோன நிலையில் இதயம் இல்லாத விஷயம் கேள்விபட்டவுடன் அது எனக்கும் மேலும் ஒரு அடியாக இருக்கிறது. அங்கே ஒரு தவறு நடந்த மாதிரி எனக்கு தோன்றுகிறது. நீச்சல் குளத்தில் அவனுக்கு ஏதோ நடந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்" என பேசியிருக்கிறார்.
"தடயவியல் நோக்கங்களுக்காக, அவரது இதயம் பரிசோதிக்கப்பட்டு, உடலை வீட்டிற்கு திருப்பி அனுப்பும்போது அது உள்ளேயே வைக்கப்பட்டது" என்று மருத்துவர் நோலா மார்கரெட் குணவன் தி சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தித்தாளிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.