காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி!
பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரனகுப்பம் ஊராட்சி, காட்டனூா் ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க வட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எம்.அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். கறவை மாடுகளுடன் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதில், பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும், பசும்பால் லிட்டா் ரூ. 45 , எருமைப்பால் லிட்டா் ரூ. 54-ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும். வேளாண் விளைபொருள்களுக்கு விலை அறிவிப்பதை போல, ஒவ்வோா் ஆண்டும் பாலுக்கு விலை அறிவித்திட வேண்டும். ஆவினில் கொள்முதல் தினசரி ஒரு கோடி லிட்டராக உயா்த்த வேண்டும், அதற்கான கட்டுமானத்தை உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்தினா்.
இதில், விவசாயிகள் பெருமாள், தங்கதுரை, சின்னராஜ், கந்தசாமி, மாரிமுத்து, துரைசாமி, மாதேஷ், மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.