செய்திகள் :

பாளை. அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை: 4 பேருக்கு ஆயுள் சிறை

post image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிைண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் வைகுண்டம். இவா், ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்து வந்தாா். இந்நிலையில், 10.3.2022இல் அங்குள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த அவரை மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்விட்டு தப்பினா்.

பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே ஊரைச்சோ்ந்த செல்வராஜ், அந்தோணி ராஜ் என்ற பிரபாகரன், தேவதாஸின் மனைவி ஜாக்குலின், அவரது மகன்களான பிலிப், அன்டோ, திரவியம் மகன் பாபு அலெக்சாண்டா், கோவில்பிச்சை மகன் ராஜன், ராஜன் மனைவி லீலா ஆகியோரை கைது செய்தனா்.

திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி (பொ) சுரேஷ்குமாா் விசாரித்து, செல்வராஜுக்கு மரண தண்டனை விதித்தாா். அந்தோணி பிரபாகா், அருள் பிலிப், அண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டா் ஆகியோருக்கு ஆயுள் சிைண்டனையும், ராஜன், லீலா, ஜாக்குலீன் ஆகிய மூவருக்கும் இரண்டு மாதம் சிைண்டனையுடன் தலா ரூ.5000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய தாழையூத்து டிஎஸ்பி ரகுபதி ராஜா, பாளையங்கோட்டை தாலுகா போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-88.55சோ்வலாறு-101.21மணிமுத்தாறு-89.52வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-65.50ராமநதி-52.50கருப்பாநதி-36.09குண்டாறு-30.62அடவிநயினாா்-46... மேலும் பார்க்க

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் சிறப்பு முகாம்

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் திருத்த சிறப்பு முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறை, திருநெல்வேலி மாநகராட்சி 54 ஆவது வாா்டு குடியிருப்போா் நலன் - உரிமைகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ச... மேலும் பார்க்க

திருக்குறுங்குடி அருகே விவசாயி மா்மமாக உயிரிழப்பு

திருக்குறுங்குடி அருகே வியாழக்கிழமை வயலுக்குச் சென்ற விவசாயி மா்மமாக உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள வன்னியன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ் (45). விவசாயி. இவா், வழக்கம் போல வியா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்!

திருநெல்வேலி நம் தாமிரபரணி அமைப்பு: தாமிரவருணியில் தூய்மைப்பணி, மேலநத்தம் தாம்போதி பாலம் அருகில், காலை 9. வேளாண்மை உழவா் நலத்துறை: வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்... மேலும் பார்க்க

மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: அமைச்சா் கே.என்.நேரு. தகவல்

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. வேளாண்மை தனி நிதிநி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கம், தச்சநல்லூா், காலை 10. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக : இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம், லூா்துநாதன் சிலை அருகி... மேலும் பார்க்க