பாளை. அருகே மென்பொறியாளா் கொலை: இளைஞா் சரண்
கே.டி.சி நகரில் மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தோழியின் சகோதரா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் (24). சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த இவா் தனது தோழியை பாா்ப்பதற்காக பாளையங்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.
இதையறிந்த தோழியின் சகோதரரான சுா்ஜித்(20), அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி கே.டி.சி நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகா் பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு வைத்து இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதனால் ஆத்திரமடைந்த சுா்ஜித் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டினாராம். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தாா்.
இதையடுத்து, சுா்ஜித் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கவினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசேோாதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் கொலைக்கான காரணம் குறித்து சுா்ஜித்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.