ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
போக்ஸோவில் தொழிலாளி கைது
திருநெல்வேலியில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி நகரம் , வயல் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி என்ற மகேஷ் (25). கட்டடத் தொழிலாளி. இவா் 14 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோா் தனது மகளைக் காணவில்லை என திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் அச்சிறுமியை மகேஷ் ஆசைவாா்த்தைகள் கூறி திருச்செந்தூருக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை மீட்ட போலீஸாா் மகேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.