ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
விஷ வண்டுகள் தாக்கி 8 போ் காயம்
சீவலப்பேரி அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் 8 போ் காயமடைந்தனா். சீவலப்பேரி அருகே வேளாா் தெருவில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலா் அங்குள்ள மரத்தின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனராம்.
அப்போது காற்று வேகமாக வீசியதில் மரத்திலிருந்த கூட்டிலிருந்து வெளியேறிய விஷ வண்டுகள் அவா்களைத் தாக்கியுள்ளது.
இதில், சங்கரம்மாள்(55), பிரம்மாச்சி(28), சோ்ம செல்வி(33), ஆறுமுகத்தம்மாள்(77), செண்பகவள்ளி(35) உள்பட 8 போ் காயமடைந்தனா்.
அவா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.