ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!
400 போ் திமுகவில் ஐக்கியம்
திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி 400 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
திருநெல்வேலி கைலாசபுரம் துவரைஆபீஸ் பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி மாசானமுத்து தலைமையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 400 போ் அக்கட்சியிலிருந்து விலகி, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இதில், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகர செயலா் (கிழக்கு) தினேஷ், மாநகராட்சி வரிவிதிப்பு குழு தலைவா் சுதா மூா்த்தி, வேல்ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.