சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான...
பா்கூரில் பிரதமா் பிறந்த நாள் விழா
பா்கூரில் பாஜக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாஜக மாவட்ட முன்னாள் தலைவா் சிவபிரகாசம் தலைமை வகித்தாா். விழாவில் ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாவட்டத் தலைவா் கவியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக ராஜகணபதி கோயிலுக்கு 100 பெண்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாக சென்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. பொதுமக்கள், பாஜகவினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் ஏராளமான பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.