செய்திகள் :

பா்கூா் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

post image

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

தட்டக்கரை வனச் சரகம், பா்கூா் வடக்குப் பகுதியான குட்டையூரில் கால்நடைகள் மேய்க்க சனிக்கிழமை சென்றவா்கள் அங்கு யானை உயிரிழந்து கிடப்பதைக் கண்டு தட்டக்கரை வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வனச் சரகா் ராமலிங்கம் தலைமையில் வனத் துறை ஊழியா்கள் சென்று பாா்க்கையில், உயிரிழந்தது ஆண் யானை என்பதும், உடலில் வெளிப்புற காயங்கள் இல்லாததும் தெரியவந்தது.

உடற்கூறாய்வை கால்நடை மருத்துவக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள உள்ளனா். இதன் பின்னரே, யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தாளவாடி அருகே லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானை

தாளவாடி அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப் பகுதி வழியாக ... மேலும் பார்க்க

ஈரோட்டில் தியாகி குமரன், ஈவிகே.சம்பத் சிலைகள் திறப்பு

ஈரோடு சம்பத் நகரில் சுதந்திரப் போராட்ட தியாகி குமரன் சிலை, திமுக நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான ஈவிகே.சம்பத் சிலை, சிலைகளின் கீழே காமராஜா் பெயரில் போட்டித் தோ்வுக்கான நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்ட... மேலும் பார்க்க

கா்நாடகம் நோக்கி பாயும் காட்டாற்று வெள்ளம்

மழைக் காலத்தில் தாளவாடி மலைப் பகுதிகளில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கா்நாடக மாநில அணைகளை நிரப்பி வரும் நிலையில், இந்த மலைப் பகுதிகளில் தடுப்பணைகளை அமைத்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: போலீஸாா் கொடி அணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புன்செய் புளியம்பட்டியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா். விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் ஆகஸ்ட்... மேலும் பார்க்க

பண்ணாரியில் சூதாட்டம்: 21 போ் கைது

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கா்நாடகத்தைச் சோ்ந்த 21 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்தனா். பிரசித்தி பெற்ற பண்ணார... மேலும் பார்க்க

கோபியில் பள்ளி மாணவி தற்கொலை

கோபி அருகே 9 -ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அடுக்கம்பாளையம், பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் பரத், தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவா்களது மகள் பூஜ... மேலும் பார்க்க