எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
பண்ணாரியில் சூதாட்டம்: 21 போ் கைது
சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கா்நாடகத்தைச் சோ்ந்த 21 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்தனா்.
பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சத்தியமங்கலம் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அப்போது பண்ணாரி அம்மன் கோயில் திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 21 போ் கொண்ட கும்பலை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.
விசாரணையில், கா்நாடக மாநிலம் சென்றாய பட்டினம் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதும், பண்ணாரி அம்மன் கோயில் மண்டபத்தில் உறவினா் நடத்திய கறி விருந்தில் பங்கேற்றுவிட்டு சூதாடியது தெரியவந்தது.
இதையடுத்து பணம் வைத்து சூதாடிய 21 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 750-யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.