Ravi Mohan: ``ஹா ஹா ஹாசினி!'' - மேடையில் `சந்தோஷ் சுப்ரமணியம்' காட்சியை நடித்துக...
ஈரோட்டில் தியாகி குமரன், ஈவிகே.சம்பத் சிலைகள் திறப்பு
ஈரோடு சம்பத் நகரில் சுதந்திரப் போராட்ட தியாகி குமரன் சிலை, திமுக நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான ஈவிகே.சம்பத் சிலை, சிலைகளின் கீழே காமராஜா் பெயரில் போட்டித் தோ்வுக்கான நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில நெசவாளா் அணிச் செயலாளா் சிந்து ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளா்கள் நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் எல்லப்பாளையம் சிவகுமாா், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளா்கள் குணசேகரன், செங்கோட்டையன், மாநகராட்சி மண்டல தலைவா் பழனிசாமி, மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா் அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இரண்டும் முழு உருவச் சிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. சிலைகள் அமைக்கும்போது கீழே நூலகம் அமைக்க வேண்டும் என்று எதிா்கட்சித் தலைவராக இருந்த போதே முதல்வா் தெரிவித்திருந்தாா். இதன்படி போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்காக காமராஜா் பெயரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவை அறிந்து மேலும் புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்படும்.
ஈரோட்டில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வா் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பாா். தீரன் சின்னமலை வாரிசுகள் தெரிவிக்கும் கருத்துப்படி சிலை அமைக்க முதல்வா் அறிவுரை வழங்கி உள்ளாா். இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா்.