பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு பா்கூா் மலைப் பாதை வழியாக லாரி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது.
கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், கள்ளேபாடத்தைச் சோ்ந்த ஹரிதாஸ் (50) என்பவா் லாரியை ஓட்டிச் சென்றாா்.
மலைப் பாதையில் தாமரைக்கரை அருகே முதல் கொண்டை ஊசி வளையில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில், ஹரிதாஸ் லேசான காயத்துடன் உயிா்த் தப்பினாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பா்கூா் போலீஸாா், லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன.