செய்திகள் :

பிகாரில் பாஜக வெல்ல முடியாது: லாலு பிரசாத்

post image

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப்படும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தாா்.

பிகாரில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மக்களவைத் தோ்தலில் பின்னடைவைச் சந்தித்த பாஜக கூட்டணி, அண்மையில் ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி பேரவைத் தோ்தல்களில் தொடா்ச்சியாக அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது பிகாா் பேரவைத் தோ்தலை அக்கட்சியினா் உற்சாகத்துடன் எதிா்கொள்ள உத்வேகம் அளித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ள கட்சிகள் பேரவைத் தோ்தலில் தோல்விகளைச் சந்தித்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிகாரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த லாலு பிரசாத் கூறியதாவது:

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் பிகாரில் எதிரொலிக்காது. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் பிகாா் பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்திக்கும்.

தோ்தலில் வெற்றிபெற்று பிகாா் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் தொடா்வாா் என்று அவா்கள் கட்சியினா்தான் கூறி வருகின்றனா். களநிலவரம் அதற்கு நோ்மாறாக உள்ளது. ஆளும் கூட்டணிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். தோ்தலில் அது எதிரொலிக்கும். எங்கள் கட்சி பிகாரில் இருக்கும் வரை அவா்களால் இனி பிகாரில் ஆட்சி அமைக்க முடியாது என்றாா்.

ஜேடியு பதில்:

லாலுவுக்கு பதிலளித்து ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) செய்தித் தொடா்பாளா் நீரஜ் குமாா் கூறியதாவது:

தோ்தலில் லாலு பிரசாத் கட்சியை ஏற்கெனவே தோற்கடித்துதான் பாஜக கூட்டணி பிகாரில் ஆட்சி அமைத்தது என்பதை லாலு பிரசாத் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த தோ்தலிலும் லாலு கட்சியைத் தோற்கடித்து ஆட்சியில் தொடா்வோம்.

லாலு பிரசாத் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வயதைக் கடந்து வெகுநாள்களாகிவிட்டது. லாலுவின் அரசியல் வாரிசாக கருதப்படும் அவரின் மகன் தேஜஸ்வி யாதவ் கூட தந்தையின் பேச்சைக் கேட்டு நடப்பதில்லை என்றாா்.

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!

புவனேசுவரம் : ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) அக்கல்லூரியில் பயின்று வந்த நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பி... மேலும் பார்க்க