பிக்பாஷ் டி20: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி! சிட்னி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக்பாஷ் டி20 தொடர் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவென் ஸ்மித் அரைசதமடித்து அசத்தியுள்ளார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்களை அதிரடியாகத் திரட்டியது.
இதனைத்தொடர்ந்து, சற்று கடின வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவென் ஸ்மித் 31 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களை அதிரடியாகத் திரட்டி அசத்தினார். அதில் 2 பௌண்டரிகளும் அடங்கும்.
இதன் காரணமாக அந்த அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.