பிக் பாஸ் அர்ச்சனா - அருண் பிரசாத் திருமணம்!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அர்ச்சனா, தனது நீண்ட நாள் காதலரான நடிகர் அருண் பிரசாத்தை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
இவர்களின் திருமணம் குறித்து இருவீட்டாரும் பேசிவருவதாகவும் விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அருண்பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வைல்டு கார்டு மூலம் பங்கேற்று கோப்பையை வென்றவர் அர்ச்சனா. இவர் சின்ன திரையில் வில்லியாக நடித்து கவனம் ஈர்த்தவர். பிக் பாஸ் புகழுக்குப் பிறகு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதேபோன்று பாரதி கண்ணம்மா தொடரில் நாயகனாக நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அருண் பிரசாத். இவர் சமீபத்தில் நிறைவு பெற்ற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே புகழ் பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கேமராக்கள் முன்பு அர்ச்சனா உடனான காதலை (பிறந்தநாள் வாழ்த்தாக) வெளிப்படையாக அறிவித்திருந்தார் அருண். இவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இதனிடயே, காதலித்துவரும் தங்கள் திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசிவருவதாக அருண் பிரசாத் தெரிவித்துள்ளார். விரைவில் திருமண தேதி முடிவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காதலித்து திருமணம் செய்துகொள்ளும் சின்ன திரை தம்பதிகளின் பட்டியலில் விரைவில் இணையவுள்ள அருண் - அர்ச்சனா ஜோடிக்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வெளியே வந்த முதல்வேலையாக காதலை முறித்துக்கொண்ட அன்ஷிதா!