செய்திகள் :

பிக் பாஸ் 8: விஷால் உடன் காதலா? அன்ஷிதா வெளியிட்ட விடியோ!

post image

நடிகை அன்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அன்ஷிதா வெளியேறினார். அவர் வெளியேறியதற்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள பலரும் வருந்தினர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அன்ஷிதா விடியோ எதையும் வெளியிடாமல் இருந்தார். தற்போது முதல்முறையாக சமூகவலைதளத்தில் அவர் விடியோ பதிவிட்டுள்ளார்.

விடியோவில் அன்ஷிதா தெரிவித்துள்ளதாவது, ''உங்கள் செல்லம்மா அன்ஷிதா பேசுகிறேன். உங்களிடம் ஒரு நல்ல செய்தியைப் பகிர வேண்டும் என விரும்புகிறேன். உங்க வீட்டுப் பொண்ணு அன்ஷிதா என்று என்னை ரசிகர்கள் கூறுகின்றனர். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

என்னைப் பற்றிய தவறான கருத்துகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றேன். தற்போது அது நடந்துள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. பலரும் என்னைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைக்கின்றனர்.

விஷால் உடன் காதல் என்பதைப் போன்ற கருத்துகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள்தான்'' விஷாலுடன் நல்ல நட்பு உள்ளதாகப் (இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்) பகிர்ந்துள்ளார்.

சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கருத்துகள் அனைத்தையும் படித்ததாகவும், ஒட்டுமொத்தமாக பலரும் அன்பு செலுத்துவதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்ட அன்ஷிதா, மிகவும் நேர்மறையாக உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: 5 பேர் சேர்ந்து ஆடுவது நியாயமான ஆட்டமா? முத்துக்குமரனிடம் ரயான் கேள்வி!

எமர்ஜென்சி 2ஆவது டிரைலர்!

நடிகையும் இயக்குநருமான கங்கனா ரணாவத் எமர்ஜென்சி படத்தின் 2ஆவது டிரைலரை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் ப... மேலும் பார்க்க

லைகாவால் கேம் சேஞ்சருக்கு சிக்கல்?

லைகா தயாரிப்பு நிறுவனத்தால் கேம் சேஞ்சர் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரை... மேலும் பார்க்க

ஹனி ரோஸ் பதிவில் தரக்குறைவான கமெண்ட்டுகள்..! 30 பேர் மீது வழக்குப் பதிவு!

மலையாள நடிகை ஹனிரோஸின் சமூக வலைதளப் பதிவில் தரக்குறைவாக கமெண்ட்டு செய்த 30 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

டாக்ஸிக் புதிய அறிவிப்பு!

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்காவில் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு?

இயக்குநர் ராஜமௌலி தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி யாரை வைத்து புதிய படத்தை இயக்குவார... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை டிரைலர் எப்போது?

காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உ... மேலும் பார்க்க