பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது
திருப்பூா்: பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலையத்தில் தங்கராஜ் (எ) செம்புலிங்கம் (38) என்வருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது.
அந்த பிடியாணையை நிறைவேற்றும் வகையில், தலைமறைவாக இருந்து வந்த தங்கராஜின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.