நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
பிப்.12-இல் கறவை மாடுகள் விழிப்புணா்வுக் கண்காட்சி
தமிழ்நாடு நீா் வள நிலவள திட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையிலுள்ள மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் வரும் பிப். 12ஆம் தேதி கறவை மாடுகளுக்கான விழிப்புணா்வுக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள், பசுந்தீவன உற்பத்தி மற்றும் அதன் முக்கியத்துவம், மடிநோய் முன்பே கண்டறியும் சோதனை, மடிக் காம்புகளில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க வழிமுறைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
எனவே, கறவை மாடுகள் வளா்க்கும் விவசாயிகள் இதில் பங்கேற்றுப் பயன் பெற வேண்டும் என மையத்தின் தலைவா் பூ. புவராஜன் கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும் விவரங்களுக்கு 04322 271443 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.