செய்திகள் :

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தீபிகா படுகோன்..! காரணம் என்ன?

post image

பிரதமர் மோடிக்கு மன நலம் குறித்த விவாதங்களுக்காக நடிகை தீபிகா படுகோன் நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.

பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வுகள் குறித்த கலந்துரையாடல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடும் ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வு 2018 முதல் நடைபெற்று வருகிறது.

மனநலத்தினால் பாதிக்கப்பட்ட தீபிகா படுகோன் 2015இல் எல்எல்எல் (லைவ் லவ் லாஃப் பவுண்டேஷன்) தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மன நலம் குறித்த விவாதங்களுக்கு குறிப்பாக கல்வி குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:

பரிக்ஷா பே சர்ச்சாவின் 8ஆவது ஆண்டு வந்துவிட்டது. இந்தமுறை மனநலத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசுகிறோம். இந்த நல்ல நோக்கத்துக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எபிசோடு வெளியாவதற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்த புரோமோ விடியோவில் குழந்தைகள் தீபிகா படுகோனிடம் மனநலத்தை எப்படி முன்னேற்றுவது என்பது குறித்து கேள்வி கேட்பார்கள். அதற்கு தீபிகா, “எப்போதும் உங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள், அடக்கி வைக்காதீர்கள். குடும்பம் அல்லது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்” எனக் கூறினார்.

39 வயதாகும் தீபிகா படுகோன் கடைசியாக கல்கி 2989ஏடி, சிங்கம் அகெய்ன் படங்களில் நடித்திருந்தார். 2018இல் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு செப்.8ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார்.

பரிக்ஷா பே சர்ச்சாவின் 8ஆம் ஆண்டு விழாவை கடந்த திங்கள் கிழமை தில்லியில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதன் 2ஆவது எபிசோடில் தீபிகா படுகோன் கலந்துகொண்டார். இந்த விடியோ பிப்.12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

யுவன் இசையில் வித்தியாசமான கானா பாடல்..!

யுவன் இசையில் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்வீட்ஹார்ட் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம க... மேலும் பார்க்க

பெயிண்டராக தொடங்கிய வாழ்வு..! சூரி பகிர்ந்த விடாமுயற்சி விடியோ!

நடிகர் சூரி பகிர்ந்த விடாமுயற்சி விடியோ வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகராக இருந்து நாயகராக உயர்ந்துள்ளார் சூரி.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம்... மேலும் பார்க்க

பிறந்தநாள் வாழ்த்துகள் டிரைலர்!

தேசிய விருதுவென்ற நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள் பட டிரைலர் வெளியாகியுள்ளது.ரோஜி மேத்திவ், ராஜூ சந்திரா தயாரிப்பில் ராஜூ சந்திரா எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தி... மேலும் பார்க்க

அகத்தியா டிரைலர்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அகத்தியா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்தி... மேலும் பார்க்க

18 நாள்களில் 36 கதாபாத்திரங்கள் அறிமுகம்..! எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் 36 கதாபாத்திரங்கள் தினமும் இரண்டிரண்டாக அறிமுகமாகி வருகின்றன.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃ... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் பாடல் தேதி!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில்... மேலும் பார்க்க