செய்திகள் :

பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு இபிஎஸ்ஸுக்கு இருக்கிறதா? - முதல்வர் ஸ்டாலின்

post image

பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு இபிஎஸ்ஸுக்கு இருக்கிறதா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று (22-12-2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் விவரம்:

நம்மை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாகச் சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும்! அதுவும் சாதாரண வெற்றி அல்ல, சரித்திர வெற்றி பெறுவோம்! தலைவரே சொல்லிவிட்டார்...

வெற்றி சுலபமாக வந்துவிடும் என்று யாரும் மெத்தனமாக இருக்கக் கூடாது! 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அது எளிமையாக வராது! அதற்கு, இங்கு இருக்கும் அனைவரும் ஒரு உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்!

“200 தொகுதிகளில், என்னுடைய சட்டமன்றத் தொகுதி முதலாவதாக இருக்க வேண்டும், என் தொகுதிதான் அதிக முன்னிலை பெற்ற தொகுதி என்று வர வேண்டும், என் மாவட்டத்தில், என் மாநகராட்சியில், என் ஒன்றியத்தில், என் பகுதியில், என் பேரூரில், என் ஊராட்சியில், என் வார்டில்தான் அதிக முன்னிலை வாங்கியது” என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்!

இதையும் படிக்க: டிச. 26, 27-ல் சென்னை, புறநகரில் மழை!

பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா? கிடையாது.

தி.மு.க. என்றால் மட்டும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கத்திப் பேசுகிறார். கத்திப் பேசினால் தன்னை ஜெயலலிதா என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார். எம்.ஜி.ஆர் போல் தன்னுடைய கட்சிக்காரர்கள் அவரை நினைப்பார்கள் என்று நம்புகிறார். பழனிசாமி அவர்கள் என்னதான் கத்தினாலும் எப்படித்தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும் குற்றங்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. - புதிது புதிதாக முளைக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும், ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது! இது இன்று நேற்றல்ல… 75 ஆண்டுகளாக நாம் எதிர்கொள்ளும் சவால். அந்த சவாலையும் சாதனையாக்கித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது. நம்முடைய சொல்லாற்றல் - எழுத்தாற்றல் - மக்கள் நலன் ஆகியவற்றை நம்பித்தான் நாம் செயல்பட வேண்டும்!

திராவிட இயக்கத்தால் கடந்த 75 ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கிறது, ஒவ்வொரு குடும்பத்திலும் எப்படிப்பட்ட மாற்றத்தை இது கொண்டு வந்திருக்கிறது என்று இளம் தலைமுறையினரிடம் கொண்டு போக வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக மாற வேண்டும்! தி.மு.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவர் முன்பும் இருக்க அடிப்படைக் கடமை இது.

நம் முழக்கம், வெல்வோம் 200! படைப்போம் வரலாறு! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு! எனப் பேசினார்

ஒசூரில் யானை தந்தம் விற்க முயன்ற 7 போ் கைது

ஒசூா்: ஒசூரில் யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை கைது செய்த வனத் துறையினா் தப்பியோடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.ஒசூா் வனப் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் யானைகளைக் கொன்று தந்தங்களை கடத்துவதாக வனத் ... மேலும் பார்க்க

சேலத்தில் ஜவுளி பூங்காவுக்கான பணிகள் விரைவில் துவக்கம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் அதி நவீன ஜவுளி பூங்காவுக்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கூறினாா்.சேலம் மாவட்டம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் 1... மேலும் பார்க்க

பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வு: தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி கடிதம்!

தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) - பேராசிரியர் தகுதித் தேர்வு (நெட்)நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர... மேலும் பார்க்க

தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; மீனவா்களை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கண்டனம்

தொடரும் கடற்கொள்ளையா்கள் தாக்குதலிலிருந்து தமிழக மீனவா்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் கேரளம் கொண்டு செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்: ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்துக்கே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார். சுத்தமல்லியை அ... மேலும் பார்க்க

அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். ... மேலும் பார்க்க