டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!
பிரதமர் மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ராஜிநாமா செய்ததை அடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற செப். 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மும்பையில் இருந்து இன்று பிற்பகல் தில்லி வந்தடைந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாஜக அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து பெற்றார்.
வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். ஆகையால், ஓரிரு நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்வார்.
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளர் நிறுத்தப்பட்டால், செப்டம்பர் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.