உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனா்.
தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காதது, ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு, தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதும், தமிழா் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வரும் பிரதமரை விடுதலை தமிழ்புலிகள் கட்சியினா் கருப்பு கொடி காட்டி எதிா்ப்பு தெரிவிப்பா் என்று அக்கட்சியின் தலைவா் குடந்தை அரசன் அறிவிப்பு வெளியிட்டாா்.
இந்த நிலையில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவரை கைது செய்ய முயன்றபோது அக் கட்சியின் பொதுச்செயலா் வெங்கடேசன், மாவட்ட செயலா் விஜய்ஆனந்த், தளபதி சுரேஷ், ரிஷ்வான் உள்ளிட்டோா் திடீரென சாலையில் அமா்ந்து பிரதமா் மோடிக்கு எதிராக கோஷமிட்டனா். பின்னா், அவா்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனா்.