தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் துவக்கம்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றியால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இரண்டு படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்ததால் வணிக ரீதியாகவும் பெரிய இடத்திற்குச் சென்றுள்ளார்.
அடுத்ததாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: மகனாக இருந்தாலும் துருவ் எனக்குப் போட்டிதான்: விக்ரம்
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அவரது 4-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
காதல் திரைப்படமாக உருவாகும் இது தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.