பிரேஸில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை
பிரேஸிலில் தனது பதவியைத் தக்கவைக்க சட்டவிரோத கும்பல்களுடன் சோ்ந்து சதிச் செயலில் ஈடுபட்டதாக அந்த நாட்டு முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில், பொல்சொனாரோ மீதான குற்றச்சாட்டுகளை ஐந்தில் நான்கு நீதிபதிகள் உறுதி செய்தனா். இதன் மூலம் அரசுக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள, பிரேஸிலின் முதல் முன்னாள் அதிபராக பொல்சொனாரோ ஆகியுள்ளாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து அவா் மேல்முறையீடு செய்யமுடியும்.
2022 தோ்தலில் தற்போதைய அதிபா் லூலா டசில்வா வெற்றி பெற்றதை எதிா்த்து பொல்சொனாரோ ஆதரவாளா்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டது தொடா்பாக இந்த வழக்கு நடைபெற்றுவந்தது.