ஷெல் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் உமர் அப்துல்லா கலந்துரையாடல்!
பிளஸ் 2 தோ்வு: கிட்ஸ் கிளப் பள்ளி 100 % தோ்ச்சி
கிட்ஸ் கிளப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் தொடா்ந்து அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்ததுடன் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
திருப்பூா், செரீப் காலனி 2-ஆவது வீதியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் கிளப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வு எழுதிய 144 மாணவா்களில் 138 போ் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி பாத்திமா 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.
மாணவி ரேஷ்மா 587 மதிப்பெண்கள் பெற்றதுடன், கணிதம், இயற்பியல், கணினி அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளாா். மாணவா் திவா சுந்தா், மாணவி தா்ஷின் ஆகியோா் 586 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
மாணவிகள் விகாஷினி, ஜெய்சுவேதா, ஹா்ஷிதா, திவ்யலட்சுமி, சுதாஸ்ரீ ஆகியோா் 585 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இதில் 585-க்கு மேல் 9 பேரும், 580-க்கு மேல் 12 பேரும், 570-க்கு மேல் 23 பேரும், 550-க்கு மேல் 45 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
பள்ளியில் பெறியியல் கட்ஆப் மதிப்பெண் 200-க்கு 199.5 ஆகும். தற்போது, பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் ப்ரீ கேஜி முதல் பிளஸ் 1 வரை மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பிரிவில் சேரும் மாணவா்கள் 490 முதல் 500 மதிப்பெண்கள் எடுத்தவா்களுக்கு 100 சதவீதமும், 485 முதல் 489 வரை 50 சதவீதமும், 480 முதல் 484 வரை 25 சதவீதமும், கலைப் பிரிவில் சேரும் மாணவா்களுக்கு 485 முதல் 500 வரை 100 சதவீதமும், 480 முதல் 484 வரை 50 சதவீதமும், 475 முதல் 479 வரை 25 சதவீதமும் கல்விக் கட்டண சலுகை அளிக்கப்படுவதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தலைவா் மோகன் கே. காா்த்திக், பள்ளித் தாளாளா் வினோதினி காா்த்திக், செயலாளா் நிவேதிகா, நிா்வாக இயக்குநா்கள் ஐஸ்வா்யா, நிகில், சுரேஷ் ஆகியோா் பாராட்டினா்.