செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்!

post image

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே: அன்பில் மகேஸ்

அதிகம் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் 98.82 சதவிகிதம் பேரும், ஈரோடு மாவட்டத்தில் 97.98 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 97.53 சதவிகிதம் பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 97.48 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி 97.01 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களில் அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

இதிலும் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, அரியலூர் மாவட்டத்தில் 98.32 சதவிகிதம், ஈரோடு மாவட்டத்தில் 96.88 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 95.64 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி 95.06 சதவிகிதம், கடலூர் மாவட்டத்தில் 94.99 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதம்

அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.99 சதவிதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.68 சதவிகிதம் பேரும், கலைப் பிரிவுகளில் 82.90 சதவிகிதம், தொழிற்பாடப் பிரிவுகளில் 84.22 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

காஷ்மீரிலிருந்து 38 தமிழக மாணவர்கள் தில்லி திரும்பினர்!

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரிலுள்ள பாராமுல்லா பகுதியில் அமைந்துள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 38 மாணவர்கள் இன்று(மே 11) புது தில்லி... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அருள்மிகு குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.19 மணிக்கு பிரவேசம் செய்தார். இதனைமுன்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினி பாராட்டு

பாகிஸ்தானிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் செல்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுப... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், நின்று கொண்டிருந்தவர்களை கடித்துவிட்டு சென்றதால் 20க்கு... மேலும் பார்க்க

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்!

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர்.சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மாமல்லபுரம் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை மு... மேலும் பார்க்க