செய்திகள் :

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு; மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற மாணவா்கள்!

post image

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா்.

தமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அரியலூா் மாவட்டத்தில், 45 மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை 4,187 மாணவா்கள், 4, 384 மாணவிகள் என 8,571 போ் எழுதினா். அதேபோல், தனித்தோ்வா்களில் தலா 40 ஆண்கள், பெண்கள் என 80 நபா்கள் தோ்வு எழுதினா்.

செவ்வாய்க்கிழமை தோ்வு எழுதி முடித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் தோ்வு அறைகளில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு பாடங்கள் நடத்திய ஆசிரியா்களை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனா்.

மேலும் மாணவா்கள் ஒருவரை ஒருவா் ஆரத் தழுவி பிரியாவிடை பெற்றுக்கொண்டனா். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயிா் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலிய... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவ, மாணவிகள் எழுதினா். அரியலூா் மாவட்டத்தில் 172 பள்ளிகளை சோ்ந்த 5,513 மாணவா்கள், 4,557 மாணவிகள் எ... மேலும் பார்க்க

காதலா்கள் தற்கொலை!

காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன்... மேலும் பார்க்க

ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாத... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநித... மேலும் பார்க்க

வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை

அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆ... மேலும் பார்க்க