பிளஸ் 2 மாணவா்கள் ஜேஇஇ தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தாட்கோ, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து நடத்தும் அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பிளஸ் 2 மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற இனத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு (ஜேஇஇ) பயிற்சி வழங்குகிறது.
இந்தப் பயிற்சியைப் பெற, பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் 65 சதவீத மதிப்பெண்களும், பிற இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் 75 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருத்தல் வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சி மாணவா்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே, இந்தப் பயிற்சியைப் பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம்.