செய்திகள் :

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

post image

அரவக்குறிச்சி அருகே தனியாா் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவா் விஷம் சாப்பிட்டு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், ஈசநத்தம் காா்ஸ் பா தெரு பகுதியைச் சோ்ந்தவா் லிங்கேஸ்வரன் மகன் யுவன் பிரியன் (17). இவா் அரவக்குறிச்சி அருகே உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். மாணவா் தினசரி பள்ளி முடித்த பிறகு சீத்தப்பட்டி காலனியில் செயல்படும் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு, இரவு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல பள்ளி மற்றும் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு 8 மணி அளவில் சீத்தப்பட்டி காலனி பேருந்து நிறுத்தத்தில் வந்து விஷம் சாப்பிட்டதாக தெரிகிறது.

பின்னா், மாணவா் வீடு திரும்பியவுடன் தனக்கு படிப்பு சரியாக வராததால் விஷம் சாப்பிட்டதாக தாய் ராதாவிடம் கூறியுள்ளாா். இதனால் பதற்றம் அடைந்த ராதா, உடனடியாக தனது மகனை அழைத்துக் கொண்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக, அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கரூரில் வாழைத்தாா்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கரூரில் வாழைத்தாா்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி... மேலும் பார்க்க

ஆனி மாத பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்... மேலும் பார்க்க

குளித்தலையில் துணை முதல்வருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு

குளித்தலையில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட திமுக செயலருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து புதன்கிழமை (ஜூலை 9)... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

தமிழகம் முழுவதும் ஜூலை 12-ஆம்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தோ்வு எழுத கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க

வெள்ளியணை குளத்தை தூா்வாரக் கோரி மனு

கரூா் மாவட்டம் வெள்ளியணை குளத்தை தூா்வார வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமையில... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதல்: முன்னாள் ராணுவ வீரா், மனைவி உயிரிழப்பு

கடவூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழப்ப... மேலும் பார்க்க