பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்
பிளிங்கிட் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி அளிக்கும் சொமாட்டோ!
பிளிங்கிட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதன் தாய் நிறுவனமான சொமாட்டோ ரூ. 1,500 கோடி வழங்க திட்டமிட்டுள்ளது.
நிறுவனப் பதிவுக்கான ஒழுங்குமுறை தாக்கல் மற்றும் நிறுவனத்தின் விரிவாக்க உத்திகளுக்காக பிளிங்கிட் இந்தத்தொகையை பயன்படுத்தவுள்ளது.
இதன்மூலம் தனது சந்தை மதிப்பை உயர்த்தி, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் இந்தத் தொகையை ஈடுசெய்ய பிளிங்கிட் முடிவு செய்துள்ளது.
ஹரியாணா மாநிலம் குர்கானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிளிங்கிட் நிறுவனம், 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் ஆரம்பத்தில் குரோஃபெர்ஸ் (Grofers) எனப் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் பிளிங்கிட் என மாற்றப்பட்டது.
பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டுசேர்க்கும் விரைவு வணிகச் சேவையை வழங்கிவரும் இந்நிறுவனத்தை 2022ஆம் ஆண்டு சொமாட்டோ வாங்கியது.
பிளிங்கிட் நிறுவனத்தின் மதிப்பு, பங்குகள் மதிப்பு உள்பட ரூ. 4,477 கோடிக்கு சொமாட்டோ இந்நிறுவனத்தை சொந்தமாக்கியது.
பிளிங்கிட் நிறுவனத்தை வாங்கிய கையோடு கடந்த மாதம் அதில் ரூ.500 கோடியை சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் முதலீடு செய்திருந்தார்.
முதலீடு கோரும் பிளிங்கிட்
விரைவு வணிகச் சேவையில் போட்டிகள் அதிகரித்ததால், தங்கள் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் தேவைக்கான செலவை ஈடு செய்ய முதலீடுகளை எதிர்பார்த்துள்ளது பிளிங்கிட் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் தற்போதைய வருவாய், செயல்பாட்டுத் தேவைக்கான செலவுக்கு போதுமானதாக இருந்தாலும் விரிவாக்கத்துக்காக நிதி உதவியை எதிர்பார்க்கிறது.
இது குறித்துப் பேசிய பிளிங்கிட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அல்பிந்தர் தின்ஷா,
''நிறுவனத்தின் விரிவாக்க செலவு தவிர்க்க முடியாததாக உள்ளது. நிறுவனத்தை சந்தைப்படுத்துவதற்கும் மற்றும் தனித்த செலவுக்காக நிதி தேவைப்படுகிறது.
தற்போதைய வருவாயை, விரிவாக்கத்தில் முதலீடு செய்வதால் இழப்பு ஏற்படுகிறது. எங்களின் வளர்ச்சி விகிதம், விரிவாக்கத்திற்கு பெறும் நிதியை விரைவில் ஈடு செய்யும் என நம்புகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | இந்திய பங்குச் சந்தைக்கு நாளை (பிப். 26) விடுமுறை! ஏன்?