நடிகை பாலியல் வன்கொடுமை: பிரபல நடிகரைத் தீவிரமாகத் தேடி வரும் மும்பை போலீஸ்!
'பீகார் மண்ணின் மகன் சிறப்பாக விளையாடி வருகிறார்; இளம் வயதில்...' - சூர்யவன்ஷியைப் பாராட்டிய மோடி
நேற்று( மே 4) ‘கேலோ இந்தியா’ போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டி பேசியிருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார்.

லக்னோவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 34 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சரும் ஆக்கியிருந்தார். அது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரும் வைபவ்வை உச்சி முகர்ந்து பாராட்டினர்.
தொடர்ந்து ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி வரும் வைபப் சூர்யவன்ஷியை மோடி பாராட்டி இருக்கிறார். சூர்யவன்ஷி குறித்து பேசியிருக்கும் மோடி, “நான் ஐபிஎல் பார்த்தேன். பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த இளம் வயதில் அவர் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறார்.
முடிந்தவரை போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும்!
அவரின் இந்த சாதனைக்கு பின் கடின உழைப்பு இருக்கிறது. அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார்” என்றிருக்கிறார்.
தொடர்ந்து ‘கேலோ இந்தியா’ நிகழ்வில் பேசிய மோடி, “ நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பிரகாசிப்பீர்கள். முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எப்போதும் விளையாட்டு துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. புதிய கல்வி கொள்கையான தேசிய கல்வி கொள்கையில் விளையாட்டை பிரதான கல்வியின் ஒரு பகுதியாக நாங்கள் மாற்றி உள்ளோம்.
நாட்டில் நல்ல வீரர்களுடன் சிறந்த விளையாட்டு நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். விளையாட்டில் நாம் ஓர் அணியாக சேர்ந்து வெல்வதை கற்றுக்கொள்கிறோம். அதோடு ஒன்றாக சேர்ந்து முன்னேறுவதை அறிந்து கொள்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs