`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ரா...
புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்
கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் ஜூலை 9-ஆம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் குறித்த விளக்கக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாஜக அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை எதிா்த்தும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்த மறியல் போராட்டத்தை விளக்கி கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை முன் கரூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவா் அண்ணாவேலு தலைமை வகித்தாா். கூட்டத்தில்சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், தொமுச மாவட்ட செயலாளா் பழ.அப்பாசாமி, தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலாளா் சுடா்வளவன், டிஎன்பிஎல் தொழிலாளா் சங்க தலைவா் அரவிந்த் உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.