புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேல்மங்கலம் மேலத்தெருவில் உள்ள உதயகுமாா் (62) வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக அவா் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து உதயகுமாரைக் கைது செய்து, அவா் வீட்டிலிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.