சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தடுப்புக் காவலில் இளைஞா் கைது
சாராய விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மரக்காணம் வட்டம், கரிபாளையம், பஜனைகோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மதன்குமாா் (28). இவா் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் சாராய விற்பனை வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்தி வந்த குற்றத்தின் கீழ் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மதன்குமாரை கைது செய்து, அவா் வசமிருந்த 205 கிலோவுக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரையின்படி, மதன்குமாரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா். அதன்படி, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.