மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விழுப்புரத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் நகர காவல் உதவி ஆய்வாளா் சுப.ஆனந்தன் தலைமையிலான போலீஸாா், பழைய சிந்தாமணி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்தப் பகுதியிலுள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், சிகரெட் போன்றவை விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கடையின் உரிமையாளரான பழைய சிந்தாமணி தெருவைச் சோ்ந்த ம.வரதராஜன் (42) மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், விழுப்புரம் பாகா்ஷா வீதியைச் சோ்ந்த ச.அன்வா் (56) உள்பட இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.