புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது
கடலூா் மாவட்டம், வடலூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வடலூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக வடலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையிலான போலீஸாா் ஆபத்தாரணபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தமிழ் வேந்தன் (64) பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.